உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆலை இடங்களை விற்றால் தொழிலாளர்களுடன் போராட்டம்

ஆலை இடங்களை விற்றால் தொழிலாளர்களுடன் போராட்டம்

புதுச்சேரி : ஸ்பின்கோ ஆலைக்கு சொந்தமான இடங்களை விற்பனை செய்யக்கூடாது என்று மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூ., கூறியுள்ளது. கட்சியின் மாநில கமிட்டி உறுப்பினர் சங்கரன் நிருபர்களிடம் கூறியதாவது:திருபுவனை ஸ்பின்கோ கூட்டுறவு நூற்பாலை இடங்களை விற்பனை செய்து மில்லை நிர்வகிக்க அரசு முயல்வதற்கு கண்டனம் தெரிவிக்கிறோம். கடந்த காலத்தில் ரோடியர், சுதேசி பஞ்சாலைகளை மேம்படுத்துவோம் என்று சொல்லி, நிலங்கள் விற்பனை செய்யப்பட்டது. அந்த ஆலைகளின் நிலைமை மோசமடைந்துள்ளனவே தவிர மேம்படவில்லை. ஸ்பின்கோ கூட்டுறவு நூற்பாலைக்கு கூடுதல் பங்கு மூலதனம், நடைமுறை மூலதனம் இவைகளை அரசு ஒதுக்கி திறமையான நிர்வாக நடவடிக்கைகள் மூலமே ஆலை செயல்பாட்டை முறைப்படுத்த முடியும். நிலங்களை விற்பனை செய்தால் தொழிலாளர்களுடன் இணைந்து கட்சி போராடும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி