உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / செவித்திறன் குறையுடையோர் விளையாட்டு போட்டிகள்

செவித்திறன் குறையுடையோர் விளையாட்டு போட்டிகள்

புதுச்சேரி : நைனார்மண்டபம் மதர் தெரசா மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நடந்த விளையாட்டு போட்டிகளில் செவித்திறன் குறையுடைய மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். தேங்காய்த்திட்டு பச்சையப்பன் செவித்திறன் குறையுடையோர் பள்ளியின் 17ம் ஆண்டு விளையாட்டு விழா நைனார்மண்டபம் மதர் தெரசா மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. ஆசிரியை வள்ளி வரவேற்றார். ஜோதி கண் மருத்துவமனை இயக்குனர் வனஜா வைத்தியநாதன் முன்னிலை வகித்தார். மதர் தெரசா மாதிரி மேல்நிலைபள்ளி தாளாளர் பால் ராஜ்குமார், தாகூர் கலைக்கல்லூரி பேராசிரியர் சீத்தா ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

பள்ளியின் செவித்திறன் குறையுடையோர், வாய்பேசாத மாணவர்களுக்கு தொடர் ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. போட்டிகளில் செவித்திறன் குறையுடை மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினர். நிகழ்ச்சியில் பச்சையப்பன் செவித்திறன் குடையோர் பள்ளி பொது செயலாளர் வெங்கடேசன், பெற்றோர் ஆசிரியர் சங்க பாலய்யா, விஜயராமதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆசிரியர் சண்முக சுந்தரம் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை