உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / விவசாய உரங்கள் புதுச்சேரிக்கு வருகை

விவசாய உரங்கள் புதுச்சேரிக்கு வருகை

வில்லியனூர் : சம்பா பருவத்திற்கு தேவையான பாக்டம்பாஸ் மற்றும் அமோனியா சல்பேட் உரங்கள் கொச்சியில் இருந்து ரயில் மூலம் புதுச்சேரிக்கு வந்ததுள்ளது. நடப்பு சம்பா பருவத்திற்கு பயிர் செய்ய விவசாயிகள் நாற்றங்கால் மற்றும் சனப்பை பயிர் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சம்பா பருவத்திற்கு தேவையான அடி உரம் பாக்டம்பாஸ் கொச்சின் எர்ணாகுளம் பகுதியில் இருந்து ரயில் மூலம் கண்டமங்கலம் வந்துள்ளது. மொத்தம் 22 ரயில் வேகன் பெட்டிகளில் பாக்டம்பாஸ் உரம் 16 வேகனிலும், 6 வேகனில் அமோனியா சல்பேட் உரமும் என 1370 டன் உர மூட்டைகள் வந்துள்ளது.

புதுச்சேரிக்கு 800 டன் பாக்டம்பாஸ் 20 : 20 உரமும், 300 டன் அமோனியாசல்பேட் கிடைத்துள்ளது. மீதமுள்ள 192 டன் பாக்டம்பாஸ் மற்றும் 77 டன் அமோனியா சல்பேட் உரங்கள் கடலுருக்கு செல்கின்றது. கண்டமங்கலம் ரயில்வே நிலையத்தில் இருந்து புதுச்சேரி வந்துள்ள உரங்கள் பாசிக் மற்றும் விற்பனை டீலர்களுக்குப் பிரித்து கொடுக்கப்படுகிறது. இதனால் நடப்பு பருவத்திற்கு விவசாயிகளுக்கு பாக்டம்பாஸ் உரம்தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி