மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
10 minutes ago
புதுச்சேரி : ஜெகஜீவன்ராம் நினைவுநாளை அரசு சார்பில் அனுசரிக்க கோரும் மனு மீது நடவடிக்கை எடுக்குமாறு, தேசிய தாழ்த் தப்பட்டோர் ஆணையம் கூறி உள்ளது.காங்., செய்தித் தொடர்பாளர் வீரராகவன் வெளியிட்டுள்ள அறிக்கை: டில்லியில் உள்ள தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய சேர்மனிடம், வீரராகவன் அளித்துள்ள மனுவில், 'புதுச்சேரியில் வைத்திலிங்கம் தலைமையிலான காங்., ஆட்சியில் அரசு சார்பில் நிறுவப்பட்ட முன்னாள் துணை பிரதமர் பாபு ஜெகஜீவன்ராம் சிலையை, பார்லிமென்ட் சபாநாயகர் திறந்துவைத்தார். அரசு சார்பில் நிறுவப்படும் தலைவர்களின் சிலைகளுக்கு பிறந்த நாள், நினைவு நாள் அரசு சார்பில் அனுசரிப்பது விதிமுறை. கடந்த 7ம் தேதி ஜெகஜீவன் ராம் நினைவு நாள், அரசு சார்பில் அனுசரிக்கப்படவில்லை. இவ்விவகாரத்தில், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணை யம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் கூறப்பட்டிருந்தது.இந்நிலையில், ஆணையத்தின் தமிழ்நாடு, புதுச்சேரி பிரிவின் உதவி இயக்குனர் நாராயணமூர்த்தி, மாநில அரசின் ஆதி திராவிடர் நலத்துறை செயலருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ஜெகஜீவன்ராம் நினைவு நாள் அனுசரிக்கக் கோரும் மனு மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கூறி உள்ளார். மேலும், நெடுங்காடு ஆதி திராவிடர் விடுதியில் மாணவர்களுக்கு தரமற்ற உணவு வழங்கிய விவகாரம் குறித்த மனு மீது உரிய விசாரணை நடத்தி, மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து ஆணையத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும் என, கூறப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
10 minutes ago