மேலும் செய்திகள்
தேசத்தை வளர்ச்சிப்பாதையில் எடுத்துச் செல்லும் பட்ஜெட்
19 minutes ago
மத்திய பட்ஜெட்: ஒரு ரூபாயில் வரவு... செலவு...
2 hour(s) ago
புதுச்சேரி : 'சமையல் காஸ், மண்ணெண்ணெய் விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும்' என, புதுச்சேரி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூ., கட்சி வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் செயலாளர் பாலசுப்ரமணியன், நிருபர்களிடம் கூறியதாவது: விலைவாசி உயர்வு, ஊழல் ஆகியவற்றை எதிர்த்து தலைமை தபால் நிலையம் எதிரில் இன்று(28ம் தேதி) கண்டன ஆர்ப்பாட்டமும், ஆகஸ்ட் 9ம் தேதியன்று சிறை நிரப்பும் போராட்டமும் நடத்த உள்ளோம். லோக்பால் வரைவு மசோதாவை உடனடியாக சட்டமாக்க வேண்டும். சமையல் எரிவாயு, டீசல், மண்ணெண்ணெய் மீதான விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும். பொது வினியோக திட்டத்தில் 14 பொருட்களை வழங்குவதை கட்டாயமாக்க வேண்டும். புதுச்சேரியிலும், ஊழலுக்கு எதிரான மாநில சட்டத்தை அரசு கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் சங்கரன் உடனிருந்தார்.
19 minutes ago
2 hour(s) ago