உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வேளாண் மாணவர்கள் பயிற்சி நிறைவு விழா

வேளாண் மாணவர்கள் பயிற்சி நிறைவு விழா

புதுச்சேரி : வேளாண் பொருளாதாரத்துறை மாணவர்களுக்கான பயிற்சி நிறைவு விழா நேற்று முன்தினம் நடந்தது.அண்ணாமலை பல்கலைக்கழகம் வேளாண் பொருளாதாரத்துறை மாணவர்கள் கடந்த 11ம் தேதி முதல் 25ம் தேதி வரை புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் பயிற்சி பெற்றனர். நிறைவு விழா தட்டாஞ்சாவடி வேளாண் நிலையத்தில் நடந்தது. அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் பொருளாதாரத் துறைத் தலைவர் சுந்தரவரதராஜன் வரவேற்றார். புதுச்சேரி கூடுதல் வேளாண் இயக்குனர் ரவிபிரகாசம் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு, வேளாண் தொழில் துவங்க வேளாண் பட்டதாரிகளுக்கு புதுச்சேரியில் 3 லட்சம் வரை நிதி உதவி வழங்கப்படுகிறது என கூறினார். விழாவில் பயிற்சி பெற்ற பல்கலை., மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.துறை பேராசிரியர் வேல்முருகன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி