உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ராமகிருஷ்ணா மடத்தின் தலைவர் பள்ளி மாணவர்களுக்கு ஆசி

ராமகிருஷ்ணா மடத்தின் தலைவர் பள்ளி மாணவர்களுக்கு ஆசி

புதுச்சேரி : திருபுவனை சுவாமி விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி சென்னை ராமகிருஷ்ணா மடத்தின் வழிகாட்டுதலின்படி இயங்கி வருகிறது. ஆண்டுதோறும் இப்பள்ளியில் பயின்ற மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்று 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்று வருகின்றனர். கடந்த மூன்று ஆண்டுகளாக இப்பள்ளியில் பயின்ற மாணவர்கள் சென்டாக் அரசு ஒதுக்கீட்டில் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளிலும் சேர்ந்து வருகின்றனர். இப்பள்ளியில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் சதீஷ்குமார், சிவகுரு, வினோத்குமார், அருண்சூரியன் ஆகியோர் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி, வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி, மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி, அறுபடை வீடு மருத்துவக் கல்லூரிகளில் இடம் பெற்றுள்ளனர்.இவர்கள் காஞ்சிபுரம் ஸ்ரீ ராமகிருஷ்ணா மடத்தின் தலைமை சுவாமிஜி ஸ்ரீமத் சுவாமி தர்மாத்மானந்த மகாராஜிடம் ஆசி பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ