உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வியாபாரிகள் கையெழுத்து இயக்கம்

கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வியாபாரிகள் கையெழுத்து இயக்கம்

புதுச்சேரி : பெரிய மார்க்கெட் வியாபாரிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.பெரிய மார்க்கெட் வியாபாரிகள் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர். கோரிக்கைகள் தீர்க்கப்படாததால், முற்றுகை போராட்டம் நடத்த முடிவு செய்தனர். நகராட்சித் தலைவரும், கமிஷனரும் உறுதி அளித்ததால் முற்றுகைப் போராட்டம் கைவிடப்பட்டது.வியாபாரிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் பெரிய மார்க்கெட் வியாபாரிகளிடம் கையெழுத்து பெறப்பட்டது. சம்மேளனத் தலைவர் முத்துலட்சுமி, செயலாளர் லதா, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் நாரா கலைநாதன், விஸ்வநாதன், நகர கமிட்டி பொருளாளர் சுப்பிரமணி, வக்கீல் கண்ண், இந்திய கம்யூ., நகர செயலாளர் ஆனந்து, மகளிர் அணி தலைவி சரளா, நிர்வாகிகள் ஹேமலதா, சிவகுருநாதன், தயாளன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.பெரிய மார்க்கெட்டில் அடிக்காசு வியாபாரிகளுக்கு மின் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும். மேற்கூரை அமைக்க வேண்டும். தரையை மாற்ற வேண்டும்.

மார்க்கெட்டில் கடை வைத்திருப்போருக்கும், வாடிக்கையாளர்களுக்கும் குடிநீர், கழிவறை உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும். ரங்கப்பிள்ளை வீதியில் தினந்தோறும் சேரும் குப்பைகளை அன்றே அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை