மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
53 minutes ago | 1
எதிரிகளுக்கு ஆதரவு தரும் காங்: பாஜ குற்றச்சாட்டு
1 hour(s) ago | 2
புதுச்சேரி : 'கவர்னர் உரையில் மக்களுக்கான எவ்வித நலத்திட்டங்களும் இல்லை' என, புரு÷ஷாத்தமன் எம்.எல்.ஏ., கூறினார். கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது அவர் பேசியதாவது: கவர்னர் உரையில் மக்களுக்கான எவ்வித நலத்திட்டங்களும் இல்லை. பூச்சி மருந்து, உரம், விதை விலை உயர்ந்து விட்டது. அதனால், விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. கடலூர், புதுச்சேரி ரயில் பாதை திட்டம் குறித்து, 1985ம் ஆண்டு முதல் பேசப்பட்டு வருகிறது. அது குறித்து எந்த திட்டமும் கவர்னர் உரையில் இல்லை. நகரப் பகுதியில் உள்ள அனைத்து குடிநீர் குழாய்களையும் புதிதாக மாற்றி அமைக்கப் போவதாகக் கூறப்பட்டுள்ளது. கிராமப் பகுதிகளிலும் குடிநீர் குழாய்கள் துருப்பிடித்து சரியாக இல்லை. எனவே, கிராமங்களிலும் குடிநீர் குழாய்களை மாற்றியமைக்க வேண்டும்.பொதுமக்களோ, எம்.எல். ஏ.,க்களோ திருப்தி அடையும் வகையில், எந்த திட்டங்களும் இல்லை. கவர்னர் உரையில் விவசாயத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் ஏதுமில்லை. இவ்வாறு அவர் பேசினார்.
53 minutes ago | 1
1 hour(s) ago | 2