உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கால்வாய் அகலப்படுத்தும் பணி துவக்கம்

கால்வாய் அகலப்படுத்தும் பணி துவக்கம்

புதுச்சேரி : ராஜிவ்காந்தி சிக்னல் அருகே கால்வாய் அகலப்படுத்தும் பணியை அசோக் ஆனந்தன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். ராஜிவ்காந்தி சதுக்கம் முருகா திரையரங்கு எதிரே மழைக்காலங்களில் நீர் வடியாமல் தேங்கி நிற்பதால், மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதுகுறித்து அசோக் ஆனந்து எம்.எல்.ஏ., விடுத்த கோரிக் கையை ஏற்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். இதனையடுத்து பொதுப்பணித்துறை மத்திய கோட்ட அதிகாரிகள் 20 லட்சம் ரூபாய் மதிப்பில், வாய்க்கால் அகலப்படுத்த முடிவு செய்தனர். இதற்கான பூமி பூஜை முருகா தியேட்டர் எதிரே நடந்தது. நிகழ்ச்சியில் அசோக் ஆனந்து எம்.எல்.ஏ., செயற் பொறியாளர் வேதரத்தினம், உதவிப் பொறியாளர் ஜெயகாந்தன், இளநிலைப் பொறியாளர் ஏழுமலை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி