| ADDED : ஆக 29, 2011 10:55 PM
புதுச்சேரி : புதுச்சேரியில் பரவி வரும் விஷக் காய்ச்சலைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாநில காங்., செய்தித் தொடர்பாளர் வீரராகவன் வெளியிட்டுள்ள அறிக்கை: புதுச்சேரி பிராந்தியம் முழுவதும் பொது மக்களுக்கு திடீரென காய்ச்சல் பரவி வருகிறது. இந்த விஷக் காய்ச்சலால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக கிராமப்புறங்களில் இந்த காய்ச்சல் அதிகளவில் பரவி, பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, வேகமாகப் பரவி வரும் காய்ச்சலைக் கண்டறிந்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையும், காய்ச்சல் பரவாமல் தடுக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே இதற்கான காரணத்தை கண்டறிந்து, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த, சுகாதாரத்துறை தீவிர கவனம் செலுத்த வேண்டும்.கிராமப்புற மருத்துவமனைகளில் போதிய மருந்து மாத்திரைகள் இருப்பு வைக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.