உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாநில வளர்ச்சிக்கு மாற்றுத் திட்டத்தை வலியுறுத்திபோராட்டம் நடத்த மா.கம்யூ., முடிவு

மாநில வளர்ச்சிக்கு மாற்றுத் திட்டத்தை வலியுறுத்திபோராட்டம் நடத்த மா.கம்யூ., முடிவு

புதுச்சேரி : மாநில வளர்ச்சிக்கான மாற்றுத் திட்டத்தை முன் வைத்து தொடர் போராட்டம் நடத்த மா.கம்யூ., முடிவு செய்துள்ளது. புதுச்சேரி மா.கம்யூ., பிரதேசக்குழு கூட்டம் ராமசாமி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் தமிழ் மாநிலக்குழு உறுப்பினர் குணசேகரன், பிரதேச செயலாளர் பெருமாள், மாநிலக்குழு உறுப்பினர் முருகன் மற்றும் ராஜாங்கம், நிலவழகன், முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.கடந்த தேர்தலில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அ.தி.மு.க., என்.ஆர். காங்., கூட்டணியை ஆதரிப்பதென மா.கம்யூ., கட்சி தீர்மானித்தது.தேர்தல் தொகுதி பங்கீட்டில் மா.கம்யூ., கட்சிக்கு உரிய நியாயம் வழங்கப்படவில்லை என்றாலும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த கட்சி உறுதியாக இருந்தது.மாநில மக்கள் காங்., தி.மு.க.,கூட்டணியை தோற்கடித்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள். ஆட்சி பொறுப்பேற்ற புதிய அரசு மாநில மக்களின் எதிர்பார்ப்புகளை, உணர்வுகளை பிரதிபலிக்கவில்லை. பட்ஜெட்டில் ஆக்கப்பூர்வமான வளர்ச்சித் திட்டங்கள் இல்லை. 4400 கோடி ரூபாய் கடன் சுமையால் அரசின் பல நலத்திட்டங்கள் முடங்கியுள்ளன. மஞ்சள் அட்டைக்கு இலவச அரிசி வழங்கப்படவில்லை. மாநிலத்தில் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி போன்ற சமூக குற்றங்கள் பெருகி வருகின்றது. குவிந்து கிடக்கிற மக்கள் பிரச்னைகள் மீதும் மாநில வளர்ச்சிக்கான மாற்றுத்திட்டத்தை முன் வைத்து அக்டோபர் மாதத்தில் தொடர் இயக்கங்களை நடத்திட மா.கம்யூ.,கட்சியின் பிரதேசக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை