உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஜெய்ப்பூரில் தேசிய அளவிலான சீனியர் ஆடவர் உசு தற்காப்பு கலை போட்டி புதுச்சேரி வீரர்கள் பங்கேற்பு  

ஜெய்ப்பூரில் தேசிய அளவிலான சீனியர் ஆடவர் உசு தற்காப்பு கலை போட்டி புதுச்சேரி வீரர்கள் பங்கேற்பு  

புதுச்சேரி: தேசிய அளவிலான சீனியர் ஆடவர் உசு தற்காப்பு கலை போட்டியில் பங்கேற்க சென்ற புதுச்சேரி சீனியர் வீரர்கள் வழி அனுப்பும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. மத்திய அரசின் இளைஞர் மற்றும் விளையாட்டு துறை, இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் அங்கீகாரம் பெற்ற அகில இந்திய உசு தற்காப்பு கலை பெடரேஷன் சார்பில் தேசிய அளவிலான சீனியர் ஆடவர் உசு தற்காப்பு கலை போட்டிகள் நாளை ( 14ம் தேதி) முதல் 19ம் தேதி வரை, ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் விளையாட்டு அரங்கத்தில் நடக்கிறது. இதில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த உசு தற்காப்பு கலை வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர். புதுச்சேரி மாநிலம் சார்பாக 10 சீனியர் வீரர்கள் போட்டியில் பங்கேற்க உள்ளனர். அவர்களுக்கான வழியனுப்பும் நிகழ்ச்சி ரயில் நிலையத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு புதுச்சேரி மாநில உசு தற்காப்பு கலை சங்கத் தலைவர் வளவன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் வழக்கறிஞர் மேரி ஜெயன் முன்னிலை வகித்தார். புதுச்சேரி மாநில உசு தற்காப்பு கலை சங்கத்தின் பொருளாளர் வழக்கறிஞர் அசோக் மற்றும் அணியின் மேலாளர் அனீஸ் ஆகியோர் கலந்து கொண்டு வீரர்களை வாழ்த்தி வழி அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !