உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆசியா அளவிலான பென்காக் சிலாட் போட்டி புதுச்சேரி வீரர்கள் பதக்கம் வென்று சாதனை

ஆசியா அளவிலான பென்காக் சிலாட் போட்டி புதுச்சேரி வீரர்கள் பதக்கம் வென்று சாதனை

பாகூர்: ஆசியா அளவிலான பென்காக் சிலாட் போட்டியில், இந்திய அணி சார்பில் பங்கேற்ற புதுச்சேரி வீரர்கள் வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.ஆசியா அளவிலான 8வது பென்காக் சிலாட் போட்டி, கடந்த 10ம் தேதி துவங்கி 16ம் தேதி வரை, உஸ்பெகிஸ்தான் நாட்டில் புக்காரா நகரத்தில் நடைபெற்றது. ஜூடோ, மல்யுத்தம், பாக்ஸிங், கிக் பாக்ஸிங், டேக்வாண்டோ போட்டிகளின் கலவையாக கொண்ட இந்த பென்காக் சிலாட் விளையாட்டு போட்டியில், இந்திய அணி சார்பில் புதுச்சேரி வீரர்கள் பிரேம்குமார், பிரவீன்குமார், மணிகண்டன், ஹேமா, காவியா, ஜூவிதா, ரஜ்ஜனி, பரமேஸ்வரி, பிரித்தீ ஆகியோர் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தினர்.இதில், பிரித்தீ வெள்ளி பதக்கமும், பிரவீன்குமார் வெண்கல பதக்கமும் பெற்று இந்தியாவிற்கும், புதுச்சேரி மாநிலத்திற்கும் பெருமையை தேடி தந்துள்ளனர். மேலும், இந்த போட்டியில், இந்திய பென்காக் சிலாட் கூட்டமைப்பின் சார்பில், இந்திய அணியின் மேலாளராக புதுச்சேரியை சேர்ந்த அருள்ஜோதி பங்கேற்றிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி