உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரி துறைமுக மேம்பாடு சபாநாயகர் கோரிக்கை  

புதுச்சேரி துறைமுக மேம்பாடு சபாநாயகர் கோரிக்கை  

புதுச்சேரி: டில்லி சென்றுள்ள சபாநாயகர் செல்வம், நேற்று மத்திய துறைமுகம், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவாலை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார்.அப்போது, புதுச்சேரியில் உள்ள துறைமுகத்தை மேம்படுத்தி சரக்கு மற்றும் பயணிகள் கப்பல் போக்குவரத்தை தொடங்கவும், சரக்குகளை கையாளுகின்ற முனையம் அமைப்பதற்கும், துறைமுக மேம்பாட்டு பணிகளுக்காக கூடுதல் நிதியை ஒதுக்கி அதற்கான பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார்.புதுச்சேரி துறைமுக மேம்பாட்டு பணிகளுக்கு கூடுதல் கவனம் செலுத்துவதாக மத்திய அமைச்சர் உறுதி அளித்தார். இந்த சந்திப்பின்போது அதிகாரிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை