உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரியில் பிளஸ் 1 தேர்வில் 96.86 சதவீதம் தேர்ச்சி

புதுச்சேரியில் பிளஸ் 1 தேர்வில் 96.86 சதவீதம் தேர்ச்சி

புதுச்சேரி, மே 17-பிளஸ் 1 பொதுத் தேர்வில் புதுச்சேரி, காரைக்காலில் தனியார் பள்ளிகள் 96.86 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. கடந்தாண்டினை விட 0.89 சதவீதம் தேர்ச்சி சரிந்துள்ளது.தமிழக பாடத்திட்டத்தின் கீழ் பிளஸ் 1 பொது தேர்வு நடந்தது. அரசு பள்ளிகள் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்திற்கு மாறியதால் புதுச்சேரியில் 3,912 மாணவர்கள், 3,627 மாணவிகள் என மொத்தம் 7,539 தனியார் பள்ளி மாணவர்கள் தேர்வு எழுதினர்.நேற்று தேர்வு முடிவு வெளியானது. இதில் 3,739 மாணவர்கள், 3,563 மாணவிகள் என, 7,302 பேர் தேர்ச்சி பெற்றனர். ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 96.86 ஆகும். மாணவர்களின் தேர்ச்சி 95.58, மாணவிகள் தேர்ச்சி 98.24 சதவீதமாகவும் உள்ளது. கடந்தாண்டு 97.75 சதவீதமாக பிளஸ் 1 தேர்ச்சி நிலையில் இந்தாண்டு 0.89 சதவீத தேர்ச்சி புள்ளிகள் சரிந்துள்ளன.புதுச்சேரி பிராந்தியத்தில் 3,659 மாணவர்கள், 3,281 மாணவிகள் என, 6,940 பேர் தேர்வு எழுதினர். 3,499 மாணவர்கள், 3,223 மாணவிகள் என 6,722 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி 96.86 சதவீதமாகும். கடந்தாண்டு புதுச்சேரி பிராந்தியம் பிளஸ் 1 தேர்வில் 97.89 சதவீதம் தேர்ச்சி பெற்ற நிலையில் தற்போது 1.03 சதவீதம் சரிந்துள்ளது. காரைக்கால் பிராந்தியத்தில் 253 மாணவர்கள், 346 மாணவிகள் என, மொத்தம் 599 பேர் எழுதினர். இதில் 240 மாணவர்கள், 340 மாணவிகள் என 580 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி 96.83 சதவீதமாகும். பிளஸ்1 பொதுத் தேர்வில் தேர்ச்சி கடந்தாண்டு 96.27 சதவீதம் இருந்த நிலையில் இந்தாண்டு 0.56 சதவீதம் அதிகரித்துள்ளது.புதுச்சேரி, காரைக்காலில் 100 தனியார் பள்ளிகள் பிளஸ் 1 தேர்வு எழுதிய நிலையில் 40 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன. புதுச்சேரியில் 29 பள்ளிகள், காரைக்காலில் 11 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன. பாடரீதியாக சமஸ்கிருதம்-1, பிரெஞ்சு-44, இயற்பியல்-5, கணிப்பொறி அறிவியல்-76, கணிதம்-13, தாவரவியல்-1, பொருளியல்-9, வணிகவியல-10, கணக்கு பதவியல்-2, வணிக கணிதம்-4, கணிப்பொறிய பயன்பாடு-31 என, மொத்தம் 196 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி