உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மனைவி கழுத்து அறுத்து கொலை சந்தேக கணவர் கைது புதுச்சேரியில் பரபரப்பு

மனைவி கழுத்து அறுத்து கொலை சந்தேக கணவர் கைது புதுச்சேரியில் பரபரப்பு

புதுச்சேரி: நடத்தையில் சந்தேகப்பட்டு, மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.புதுச்சேரி புதுசாரம், வெங்கடேஸ்வரா நகர், பொறையார் குளம், 2வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் விக்கி (எ) விக்னேஷ்வரன்,47; தச்சு தொழிலாளி. இவரது மனைவி இந்துமதி,37; இவர்களுக்கு 14 வயதில் மகனும், 12 வயதில் மகளும் உள்ள நிலையில், தம்பதியருக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.இந்நிலையில் நேற்று காலை பிள்ளைகள் பள்ளிக்கு புறப்பட்டு சென்ற பின், காலை 9:30 மணிக்கு தம்பதிக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது, விக்னேஷ்வரன் வீட்டின் கதவை உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டுவிட்டு, 'டிவி' சத்தத்தை அதிகமாக வைத்துள்ளார்.சற்று நேரத்தில் இந்துமதியின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து கதவை தட்டினர். இந்துமதியின் அலறல் சத்தம் நின்ற சற்று நேரத்தில் கதவை திறந்து கொண்டு விக்னேஸ்வரன் ரத்த கறையுடன் வெளியே வந்தார்.உள்ளே, இந்துமதி ரத்த வௌ்ளத்தில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், கோரிமேடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதையடுத்து, சீனியர் எஸ்.பி., சுவாதிசிங், இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.சம்பவ இடத்தை பார்வையிட்டு தடயங்களை சேகரித்தனர். உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.போலீசார் விக்னேஷ்வரனை கைது செய்து விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில் இந்துமதியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, கழுத்தை அறுத்து கொலை செய்தது தெரிய வந்தது. தொடர்ந்து அவரிடம் கோரிமேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.மனைவியை, கணவரே கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் புதுசாரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை