உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பென்காக் சிலாட் போட்டி புதுச்சேரி மாணவர் வெற்றி

பென்காக் சிலாட் போட்டி புதுச்சேரி மாணவர் வெற்றி

புதுச்சேரி: தென்மாநில பென்காக் சிலாட் போட்டியில் புதுச்சேரி முத்து ரத்தின அரங்கம் மேல்நிலைப்பள்ளி மாணவர் வெற்றி பெற்றார். தென்னிந்திய அளவிலான 6வது பென்காக் சிலாட் போட்டி திருச்சி கொங்கு நாடு கல்லுாரியில் கடந்த 19 மற்றும் 20ம் தேதிகளில் நடந்தது. அதில் புதுச்சேரி முத்து ரத்தின அரங்கம் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவர் தினேஷ் 17 வயதுக்குட்பட்ட ஜூனியர் பிரிவில் பங்கேற்று தாண்டிங் போட்டியில் முதல் பரிசும், காண்டா போட்டியில் இரண்டாம் பரிசும் பெற்றார். தென்மாநில போட்டியில் வெற்றி பெற்ற மாணவர் தினேஷ், புதுச்சேரி மாநில கோஜூரியோ கராத்தே சங்க மாநில செயலாளர் சுந்தர்ராஜனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை