உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தேசிய பீச் வாலிபால் போட்டி புதுச்சேரி அணிக்கு வெள்ளி

தேசிய பீச் வாலிபால் போட்டி புதுச்சேரி அணிக்கு வெள்ளி

புதுச்சேரி : தேசிய பீச் வாலிபால் போட்டியில், புதுச்சேரி மகளிர் அணிவெள்ளி பதக்கம் வென்றுள்ளது.கேலோ இந்தியா கடற் கரை விளையாட்டு திருவிழா டாமன் டையூவில் கடந்த 19ம் தேதி முதல் நேற்று வரை நடைபெற் றது. இதில்,பீச் வாலிபால், பென்கா சிலாட் மற்றும் செபக் டக்ரா போட்டிகளில் புதுச்சேரி மாநிலம் சார்பில் வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.பீச் வாலிபால் போட்டி யில்புதுச்சேரி பெண்கள் அணி அரை இறுதி போட் டியில், கேரளவை வீழ்த்தி, இறுதி போட்டிக்கு முன்னேறியது. நேற்று முன்தினம் நடந்த இறுதிப் போட்டியில் தமிழக அணியுடன் மோதியது.அதில், புதுச்சேரி அணி முதல் சுற்றில் 21-19 புள்ளிகள் பெற்று முன்னிலை பெற்ற நிலையில் இரண்டாம் சுற்றில் 17-21 புள்ளிகள் பெற்றது. இரு அணிகளும் சம நிலை பெற்ற நிலையில் மூன்றாம் சுற்று போட்டி யில் தமிழக அணி 19 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பிடித்து தங்கம் வென்றது. புதுச்சேரி அணி 17 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ