உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பயங்கரவாதிகளின் கூடாரமா புதுச்சேரி;   பாதுகாப்புடன் ஐ.பி.எஸ்.,கள் செல்வது ஏன்?

பயங்கரவாதிகளின் கூடாரமா புதுச்சேரி;   பாதுகாப்புடன் ஐ.பி.எஸ்.,கள் செல்வது ஏன்?

புதுச்சேரி சின்னஞ்சிறிய யூனியன் பிரதேசம். மொத்த மக்கள் தொகை பக்கத்தில் உள்ள தமிழகத்தின் விழுப்புரம் கடலுார் மாவட்டத்தை ஒப்பிடுகையில் மிகவும் குறைவு. விழுப்புரம், கடலுார் மாவட்டங்களில் ஒரே ஒரு ஐ.பி.எஸ்., அதிகாரி சட்டம் ஒழுங்கு பாதுகாப்பில் உள்ளார். ஆனால் புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்க 9 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் உள்ளனர். போலீசாரின் எண்ணிக்கையும் அதிகம்.இங்குள்ள சில ஐ.பி.எஸ்., அதிகாரிகளின் பணிகளை செய்வதற்கு மட்டும் ஆர்டலி மற்றும் பாதுகாப்பிற்கு என பல போலீசாரை நியமித்து கொள்கின்றனர். பொதுமக்களை பாதுகாக்க வேண்டியது போலீஸ் அதிகாரிகள். ஆனால் அவர்களின் பாதுகாப்பிற்கு முன்னாலும், பின்னாலும் இரு காரில் 10க்கும் மேற்பட்ட போலீசார் செல்லும் நிலை புதுச்சேரியில் உள்ளது.ஒரு ஐ.பி.எஸ்., அதிகாரிக்கு முன்னால் காரும், பின்னால் 5 பைக்கில் பின் தொடர்ந்து செல்லும் மோசமான நிலை தான் புதுச்சேரியில் நிலவுகிறது. புதுச்சேரி அமைதியான பகுதி என்பதால் தான் நாட்டின் பல மாநிலத்தில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.புதுச்சேரி, நக்சலைட்டுகள் உள்ள அபயாகரமான பகுதி கிடையாது. எதற்காக ஒரு போலீஸ் அதிகாரிக்கு இவ்வளவு பாதுகாப்பு போலீசார் செல்ல வேண்டும். போலீஸ் அதிகாரிகளுக்கே பாதுகாப்பு இல்லை என்றால், பொதுமக்களை போலீசார் எப்படி பாதுகாப்பர் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Saran
நவ 24, 2024 14:52

I am the real citizen of Pondichéry. It was a beautiful and peacefull city. Now Pondichéry is a huge population from other states particularly from Tamilnadu Cuddalore, Villuppuram and other parts. When we have more Numbers of outsiders, they won't treat the city as their home town, they simple exploit the ressources. The only advantage with this immmigration is Aurobindo group Bengali groupis not exploiting Pondichéry as they did previously. We have an another group from Rajasthan and Gujarat like everywhere in Tamil nadu, thier population is also increasing rapidly in Pondichéry. When i see my city i have the feeling that i am the foreigner in my own hometown.


morlot
நவ 24, 2024 18:53

It is the fault of frech govt giving asylum to Aurobindo at pondichery.Thats why the whole white town and other parts of pondy is under their control,of beengalis,Gujarati,Bombay wallas et Also,they are central govt influence Pondicherry chassed french,but became slaves of north indians of ashram


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை