டி–20 கிரிக்கெட் போட்டி புதுச்சேரி அணி வெற்றி
புதுச்சேரி: ஆடவருக்கான டி–20 கிரிக்கெட் போட்டியில் புதுச்சேரி அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் மகராஷ்டிரா அணியை வீழ்த்தியது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நடத்தும் சீனியர் ஆண்களுக்கான டி-20 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்று (நவ.,14) காலை சண்டிகர் நகரில் நடந்த போட்டியில் புதுச்சேரி அணியும், மகாராஷ்டிரா அணியும் மோதின. முதலில் ஆடிய புதுச்சேரி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழந்து 204 ரன்கள் எடுத்தது. புதுச்சேரி அணியின் பானு ஆனந்த் 27 பந்துகளில் 46 ரன்களும், ஆகாஷ் புகழேந்தி 14 பந்துகளில் 42 ரன்களும், பரமேஸ்வரன் 21 பந்துக்களில் 46 ரங்களும் எடுத்தனர். தொடர்ந்து ஆடிய மகாராஷ்டிரா அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழந்து 189 ரன்கள் மட்டுமே எடுத்தது. புதுச்சேரி அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் மகாராஷ்டிரா அணியை வீழ்த்தியது. புதுச்சேரி அணியின் பாதல் ராவத் 4 ஓவர் வீசி, 12 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட் எடுத்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.