உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பிரான்ஸ் நாட்டில் ஆன்மிக விழா புதுச்சேரி மண்ணின் மைந்தர்கள் ஏற்பாடு

பிரான்ஸ் நாட்டில் ஆன்மிக விழா புதுச்சேரி மண்ணின் மைந்தர்கள் ஏற்பாடு

பிரான்ஸ் நாட்டில் ஆகம முறைப்படி கோவில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் பிரான்ஸ் நாட்டில் குடியேறியுள்ளனர். குறிப்பாக, புதுச்சேரியை சேர்ந்த பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றனர். பிரான்ஸ் நாட்டில் பல்வேறு நகரங்களில் இந்தியர்கள் அதிகமாக வசிக்கும் சூழ்நிலையில் அங்கு பெரிய அளவில் கோவிலை கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான முயற்சியில் ஸ்ரீவெங்கடேஸ்வரா கோவில் பிரான்ஸ் என்ற அமைப்பு ஈடுபட்டுள்ளது. இந்த அமைப்பு திருப்பதி திருக்கல்யாண உற்சவத்தை பிரான்ஸ் நாட்டில் நடத்தி வருகிறது. அடுத்து நிதி திரட்டி கோவில் அங்கு கட்டவும் முடிவு செய்துள்ளனர்.ஸ்ரீவெங்கடேஸ்வரா கோவில் பிரான்ஸ் அமைப்பின் தலைவராக உள்ள புதுச்சேரியை சேர்ந்த கண்ணபிரான் கூறுகையில், 'பாரீசில் இருந்து ௧௦ கிலோ மீட்டர் துாரத்தில் உள்ள லே பிளான் மெனில் என்ற ஊரில் இன்று 25ம் தேதி சிறப்பு உபன்யாசம் 'ஆச்சார்ய அனுக்ரஹம்' என்ற தலைப்பில் நடக்கிறது. திருப்பதி பெருமாள் உற்சவருக்கு திருமஞ்சனம் அர்ச்சனை மற்றும் ஆராதனை நடக்கிறது. ஆன்மிக பேச்சாளர் வெங்கடேஷ் உபன்யாசம் செய்ய உள்ளார். ஜெர்மனியில் இந்து கோவிலை கட்டிய பாஸ்கர குருக்கள் கலந்து கொள்ள உள்ளார். சுவிட்சர்லாந்து, ஜெனிவா நகரத்தில் இருந்து கார்த்தி மலோலான் பங்கேற்கின்றார். ஏற்பாடுகளை புதுச்சேரியை சேர்ந்த பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் இணைத்து செய்து வருகின்றனர்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை