உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பள்ளிகளுக்கு இடையே வினாடி வினா போட்டி

பள்ளிகளுக்கு இடையே வினாடி வினா போட்டி

புதுச்சேரி: புதுச்சேரி அமலோற்பவம் கல்விக்குழுமம் சார்பில், பள்ளிகளுக்கு இடையே 16ம் ஆண்டு வினாடி - வினா போட்டி அமலோற்பவம் லுார்து அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளியில் நடந்தது. போட்டியில் 17 பள்ளிகளை சேர்ந்த 200கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இளநிலை, முதுநிலை என இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்ட இப்போட்டியில், ஒவ்வொரு பிரிவிலும் மூன்று பரிசுகள் வழங்கப்பட்டன. அதன்படி இளநிலை பிரிவில் பெத்தி செமினார் பள்ளி முதலிடம், பிரைம்ரோஸ் ஸ்கூல் இரண்டாமிடம், கே.வி., நம்பர் -1 பள்ளி மூன்றாமிடம் பிடித்தன. முதுநிலை பிரிவில் செயின் பேட்ரிக் பள்ளி முதலிடம், ஸ்டான்ஸ் போர்டு இண்டர்நேஷனல் ஸ்கூல் இரண்டாமிடம், பெத்தி செமினார் பள்ளி மூன்றாமிடம் பிடித்தன. பரிசளிப்பு விழாவில் ஆண்டோனியோஸ் பிரிட் டோ வரவேற்றார். அமலோற்பவம் கல்வி குழுமத்தின் நிறுவனர் மற்றும் முதுநிலை முதல்வர் லுார்துசாமி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி வாழ்த்தினார். இந்த ஆண்டிற்கான வினாடி வினா சுறழ்கோப்பையை பெத்தி செமினார் மேல்நிலைப் பள்ளி பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை