ரேபிஸ் நோய் குறித்த விழிப்புணர்வு பிரசாரம்
புதுச்சேரி: புதுச்சேரி, சுகாதாரம் மற்றும் குடும்ப நலவழித்துறை, மாநில ரேபிஸ் நோய் தடுப்பு திட்டம் சார்பில் உலக ரேபிஸ் நோய் குறித்த விழிப்புணர்வு ஆட்டோ பிரசாரம் இயக்குநர் அலுவலகத்தில் துவங்கியது. சுகாதாரத்துறை இயக்குநர் செவ்வேள் தலைமை தாங்கி, ரேபிஸ் விழிப்புணர்வு ஆட்டோ பிரசாரத்தை துவக்கி வைத்தார். இந்திராகாந்தி அரசு மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் ரமேஷ், உதவி இயக்குநர்கள் ரகுநாதன், உமாசங்கர், ரோசாரியோ, மக்கள் தொடர்பு அதிகாரி ஆத்மநாதன், தலைமை மருத்துவர் ஸ்டான்லி ஆம்ரோஸ், மாநில ஒருங்கிணைந்த நோய் தடுப்பு திட்ட அதிகாரி விவேகானந்தா, மாநில ரேபிஸ் நோய் தடுப்பு திட்ட அதிகாரி ஹரிஷ் வரதன் சர்மா, ரேபிஸ் நோய் திட்ட ஆலோசகர் முரளிதரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.