மேலும் செய்திகள்
குற்றங்களை தடுக்க போலீசார் சோதனை
19-Oct-2024
காரைக்கால்: காரைக்காலில் புதுச்சேரி விடுதலை நாளையொட்டி இன்று அமைச்சர் திருமுருகன் தேசியக்கொடி ஏற்றுகிறார்.காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில், புதுச்சேரி விடுதலை நாள் இன்று 1ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. கடற்கரைச்சாலையில் அமைச்சர் திருமுருகன் தேசியக்கொடியேற்றி வைத்து, காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார்.இதையடுத்து பாதுகாப்பு கருதி எஸ்.பி., சுப்ரமணியன் முன்னிலையில் போலீசார் பல இடங்களில் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர். திருநள்ளாறு, நகரப்பகுதியில் தங்கும் விடுதியில் இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன், கிரிஸ்டின்பால் தலைமையிலான போலீசார் விடுதிகளில் தீவிரி சோதனை நடத்தினர். பஸ் நிலையம், ரயில் நிலையம், கோவில்கள், பள்ளிவாசல், தேவாலயம் உள்ளிட்ட இடங்களில் போலீசார் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு சோதனை செய்தனர். முக்கிய சோதனைச் சாவடிகளில் போலீசார் வாகனச் சோதனையில் ஈடுப்பட்டனர்.
19-Oct-2024