மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை
புதுச்சேரி : காரைக்காலில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள கூடுதல் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை அனுப்ப வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து அ.தி.மு.க.,உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் விடுத்துள்ள அறிக்கை:தமிழகத்தில் இன்றும், நாளையும் நாகபட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு புதுச்சேரி, காரைக்கால் பகுதியிலும் மிக கனமழை எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம்விடுத்துள்ளது.இதையடுத்து, காரைக்கால் மாவட்ட நிர்வாகம் ஆலோசனைக் கூட்டம் நடத்தி, மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. மீன்வளத்துறை மூலம் வரும் 29ம் தேதி வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், தமிழகத்திலும் மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளதால், அண்டை மாவட்ட மீட்பு குழுவினரை காரைக்காலுக்கு அழைக்க முடியாத சூழல் உள்ளது. எனவே மாநிலத்தில் உள்ள மீட்பு குழுவினரை கொண்டே மீட்டுப் பணிகளை மேற்கொள்ள வேண்டிய சூழல் உள்ளது.எனவே, முதல்வர் ரங்கசாமி உயர் மட்ட ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி, காரைக்காலுக்குகூடுதல் அமைச்சர்கள் மற்றும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை அனுப்பி வைத்து, மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைபணிகளை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.