உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ரெயின்போ நகரில் கோலப்போட்டி

ரெயின்போ நகரில் கோலப்போட்டி

புதுச்சேரி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரெயின்போ நகரில் நடந்த கோலப்போட்டியை காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., துவக்கி வைத்தார்.காமராஜர் நகர் தொகுதி, ரெயின்போ நகரில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோலப்போட்டி நேற்று நடந்தது. இதில், ரெயின்போ நகர் உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். கோலப்போட்டியை காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., துவக்கி வைத்தார். போட்டியாளர்கள் பல்வேறு வண்ணங்களில் கோலங்களை போட்டு அசத்தினர். கலைமாமணி மாலதி செல்வம், லலிதாம்பிகை ஆகியோர் அடங்கிய நடுவர் குழுவினர் சிறந்த கோலங்களை தேர்வு செய்தனர்.முதல் பரிசான ப்ரிட்ஜை சிக்கு கோலம் வரைந்த ஷீலாவும், இரண்டாவது பரிசான எல்.இ.டி. டி.வி.,யை பாரதி என்பவரும், மூன்றாவது பரிசான குக்கரை ஸ்ரீதிவ்யாவும் வென்றார். அவர்களுக்கு தொகுதி காங்., பொறுப்பாளர் தேவதாஸ், மாநில சிறப்பு அழைப்பாளர் வினோத் ஆகியோர் பரிசுகள் வழங்கினர். தொடர்ந்து, 4 பேருக்கு சிறப்பு பரிசுகளும், போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் மேக்கப் கிட் மற்றும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டன. ரெயின்போ நகர் மகளிர் நல்வாழ்வு சங்கம், காங்., கட்சியினர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை