பின்னாட்சிக்குப்பத்தில் வீடுகளை சூழ்ந்த மழைநீர்
பாகூர்; ன்னாட்சிக்குப்பத்தில் குடியிருப்பு பகுதியில், மழைநீர் வெளியேற வழியின்றி தேங்கி நிற்பதால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.ஏம்பலம் தொகுதி, பின்னாட்சிக்குப்பம் வி.ஐ.பி., நகர் மற்றும் அதையொட்டிய நகர் பிரிவில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. விழுப்புரம் - நாகப்பட்டினம் புறவழிச்சாலை பணிக்காக, இந்த நகரின் அருகில் உள்ள நீர்வழி பாதைகள் மாற்றி அமைக்கப்பட்டது. அப்போது, அங்குள்ள முக்கிய வடிகாலுக்கு பாலம் அமைக்கப்படாமல், சாலை போடப்பட்டது.இதன் காரணமாக, தற்போது பெய்து வரும் மழையால், பின்னாட்சிக் குப்பம் வி.ஐ.பி., நகர் மற்றும் அதையொட்டி உள்ள குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால், பாம்பு, தேள் போன்ற விஷ பூச்சிகள் வீடுகளுக்குள் தஞ்சமடைவதால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.எனவே, குடியிருப்பு பகுதியில் தேங்கி நிற்கும் மழைநீரை வெளியேற்றிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.