உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ராஜ்பவன் தொகுதி காங்., அலுவலகம் திறப்பு

ராஜ்பவன் தொகுதி காங்., அலுவலகம் திறப்பு

புதுச்சேரி : புதுச்சேரி, ராஜ்பவன் வட்டார காங்., கமிட்டி அலுவலகம் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவிற்கு, வட்டாரத் தலைவர்கள் ஜெரால்டு, ராஜ்மோகன் ஆகியோர் தலைமை தாங்கினார். தமிழ்நாடு - புதுச்சேரி காங்., கமிட்டி பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், மாநிலத் தலைவர் வைத்திலிங்கம், முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஆகியோர் தொகுதி வட்டார காங்., அலுவலகத்தை திறந்து வைத்தனர். இதில், வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர்கள் ஷாஜகான், கந்தசாமி, பெத்தபெருமாள், சீனியர் துணை தலைவர் தேவதாஸ், இளைஞரணி மாநில தலைவர் ஆனந்தபாபு, வழக்கறிஞர் அணி தலைவர் மருதுபாண்டியன், முன்னாள் கவுன்சிலர் குமரன், மாநில பொதுச் செயலாளர்கள் தனுசு, இளையராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி