மேலும் செய்திகள்
ராஜசந்துரு அறக்கட்டளை கோவிலில் அன்னதானம்
08-Aug-2025
புதுச்சேரி: ராஜ சந்துரு அறக்கட்டளை சார்பில் முத்தியால்பேட்டை வீரம், விளையாட்டு, வாழ்வியல் (வி-3) விழா நேற்று நடந்தது. விழாவிற்கு, அறக்கட்டளை நிறுவனர் ராஜ சந்துரு தலைமை தாங்கினார். விழாவில், மங்கலக் கருவரை திட்டத்தின் கீழ் 8 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, கிட்ஸ் கார்னிவல் தலைப்பில் பாடல், நடனம், ஓவியம் போன்ற பல்வேறு போட்டிகள் நடந்தப்பட்டது. அதில், பங்கேற்ற 260 குழந்தைகளில் 60 பேர் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற 6 குழந்தைகளுக்கு முதல் பரிசாக சைக்கிள்கள் வழங்கப்பட்டது. மற்றவர்களுக்கு சவுண்ட் ஸ்பீக்கர், சயின்ஸ் கிட் ஆகியவை வழங்கப்பட்டன. பின், பங்கேற்ற அனைவருக்கும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து, முத்தியால்பேட்டை தொகுதியை சேர்ந்த 1,000 குடும்பத்தினருக்கு, காஸ் அடுப்புகள் வழங்கப்பட்டன. இதில், அறக்கட்டளை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
08-Aug-2025