வாசகர்கள் கருத்துகள் ( 1 )
நல்ல கோரிக்கை. மாகே பகுதி முன்னேற அவசியம் போக்குவரத்து மேம்படுதல் வேண்டும்.
புதுச்சேரி,: சட்டசபையில் நேற்று மானிய கோரிக்கை விவாதத்தில் ரமேஷ் பரம்பத் எம்.எல்.ஏ., பேசியதாவது: ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் வரும் பயனாளிகளுக்கு பொதுவான சிகிச்சை வசதிகள் மாகி பிராந்தியம் அருகில் கண்ணுார், கோழிக்கோடு மாவட்டங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.கடந்த சட்டசபையில் அறிவித்த முதல்வர் காப்பீட்டு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும். மாகியில் பணிபுரியும் ஆயுர்வேதா, சித்தா, ஓமியோபதி டாக்டர்களுக்கு சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாகி பாலிடெக்னிக் கல்லுாரியில் போதிய ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். மாகியில் இயங்கி வரும் புதுச்சேரி பல்கலைக்கழக சமுதாய கல்லுாரிக்கு சொந்த கட்டடம் ஏற்படுத்த வேண்டும். கிழக்கு பள்ளூரில் இயங்கி வரும் அரசு அவரோஸ் நடுநிலைப்பள்ளியை மூடிவிட்டு, அந்த மூன்று மாடி கட்டடத்தை சமுதாய கல்லுாரிக்கு முயல்வதை தடுத்து நிறுத்த வேண்டும்.புதுச்சேரி -மாகி அருகே உள்ள கண்ணுார் இடையே விமான சேவை துவங்க வேண்டும். தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க சட்டத்தை கடுமையாக்க வேண்டும். கடந்த 15 ஆண்டாக காலியாக உள்ள சமூக நலத்துறை அதிகாரிகள் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றார்.
நல்ல கோரிக்கை. மாகே பகுதி முன்னேற அவசியம் போக்குவரத்து மேம்படுதல் வேண்டும்.