மேலும் செய்திகள்
சத்யபிரதா சாகு உள்ளிட்ட 9 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
2 hour(s) ago
புதுச்சேரி : புதுச்சேரியில் உள்ள தமிழக விரைவு போக்குவரத்து கழகத்தில் பணிக்கு வந்தவர்களிடம் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.தமிழக அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். புதுச்சேரியில் உள்ள தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் நேர கட்டுப்பாட்டு அதிகாரி ஒருவர் நேற்று பணிக்கு வந்தார்.அப்போது, வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் அவரிடம் பணிக்குச் செல்ல வேண்டாம் எனக் கூறி, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை சமாதானம் செய்து, கலைந்து போக செய்தனர்.
2 hour(s) ago