உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தாகூர் அரசு கலை கல்லுாரியில் ரூ.80 லட்சத்தில் வாசிப்பு கூடம்

தாகூர் அரசு கலை கல்லுாரியில் ரூ.80 லட்சத்தில் வாசிப்பு கூடம்

புதுச்சேரி : லாஸ்பேட்டை தாகூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 80 லட்சம் ரூபாய் செலவில் வாசிப்பு கூடம் கட்டும் பணியை, அமைச்சர் நமச்சிவாயம், கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., ஆகியோர் துவக்கி வைத்தனர்.லாஸ்பேட்டை தாகூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் நுாலகம் அருகே 80 லட்சம் ரூபாய் செலவில் புதியதாக வாசிப்பு கூடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடந்தது.அமைச்சர் நமச்சிவாயம், கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., ஆகியோர் பங்கேற்று பூமி பூஜை செய்து, பணிகளை துவக்கி வைத்தனர். தொடர்ந்து, அமைச்சர் நமச்சிவாயம், பேராசிரி யர்களுடன் கல்லுாரியின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். முன்னதாக, தாகூர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் வீரசெல்வம், உயர் கல்வித்துறை இயக்குநர் அமன் சர்மா, உறுப்பினர் செயலர் அசோக், பொதுப்பணித்துறை சிறப்புக் கட்டடம் செயற்பொறியாளர் கெஜலட்சுமி, கல்லுாரி முதல்வர் கருப்புசாமி, ஒருங்கிணைப்பாளர் வேலுராஜ், இளநிலைப் பொறியாளர் அனந்த பத்மநாபன், கட்டட ஒப்பந்ததாரர் அருணகிரி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை