உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புத்துயிர் பெறும் சுல்தான்பேட்டை குளம்

புத்துயிர் பெறும் சுல்தான்பேட்டை குளம்

புதுச்சேரி-விழுப்புரம் மெயின்ரோட்டில் சுல்தான்பேட்டை நுழைவு வாயில் பகுதியில் உள்ள குளம், அப்பகுதிக்கு ஒரு அடையாள சின்னமாக விளங்கியது.நுாற்றாண்டை கடந்த இக்குளம், முந்தைய காலங்களில் அப்பகுதி வாழ் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்தது.காலப்போக்கில், குளத்தை அப்பகுதி மக்கள் குளிப்பதற்கு பயன்படுத்த துவங்கிய பிறகு குளம் படிப்படியாக பொலிவிழந்தது. நாகரிக வளர்ச்சியால் சுல்தான்பேட்டை மக்கள் குளத்தை பயன்படுத்த மறந்தனர். அதனால், குளம் தன் அழகை இழந்து, இருக்கும் இடமே தெரியாமல் புதர் மண்டி குளம் மறைந்தது. இந்த குளத்திற்கு எதிரில், தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ., சிவா அலுவலகம் உள்ளது. அங்கு வந்த முதியவர் ஒருவர், எம்.எல்.ஏ.,விடம் குளத்தின் வரலாற்றை கூறினார்.அதனைக் கேட்டு மெய் சிலிர்த்த எம்.எல்.ஏ., நுாற்றாண்டுகளை கடந்த சுல்தான்பேட்டையின் அடையாள சின்னமாக இருந்த குளத்தை, தனது பதவி காலத்தில் புனரமைத்து, மீண்டும் குளத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.அதனையொட்டி, பொதுப்பணித்துறை மூலம் பல லட்சம் ரூபாய் செலவில் குளத்தை துார் வாரி, சீரமைத்து சுற்றிலும் நடைபாதை, ஓய்வு எடுக்க சாய்வு பென்ஞ், பூ செடிகள், புல் தரைகள் என குளத்தை அழகு படுத்தும் பணியை துவக்கி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி