நிவாரண உதவி
காரைக்கால்: காரைக்கால் கோட்டுச்சேரி பகுதியில் தீவிபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு சந்திரபிரியங்கா எம்.எல்.ஏ., நிவாரணம் வழங்கினார். காரைக்கால், கோட்டுச்சேரி, கொண்னக்காவாளி பகுதியில் நேற்று முன்தினம் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிவகடாட்சம் மற்றும் மாரியம்மாள் ஆகியோரின் வீடுகளில் 3 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன. தகவல் அறிந்த தொகுதி எம்.எல்.ஏ., சந்திர பிரியங்கா, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரண பொருட்கள் வழங்கி ஆறுதல் தெரிவித்தார்.