உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பெஞ்சல் புயலால் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம் 21ம் தேதி பயனாளிகள் வங்கி கணக்கில் செலுத்தப்படும் முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

பெஞ்சல் புயலால் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம் 21ம் தேதி பயனாளிகள் வங்கி கணக்கில் செலுத்தப்படும் முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரி: பெஞ்சல் புயல் வெள்ளத்தால் சேதம் அடைந்த 563 வீடுகளுக்கு ரூ. 33.78 லட்சம் நிவாரண தொகை வரும் 21ம் தேதி பயனாளிகள் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என, முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.புதுச்சேரி சட்டசபையில், பட்ஜெட் பொது விவாத்தின்போது முதல்வர் ரங்கசாமி வெளியிட்ட அறிவிப்பு;புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில், பெஞ்சல் புயல் மற்றும் அதற்கு பின், வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களுக்கு தேவையான ரூ. 761 கோடி நிவாரண நிதி வழங்க மத்திய அரசிடம் கோரப்பட்டது.புதுச்சேரி மாவட்டத்தில், தாலுகா தாசில்தார்களால் அடையாளம் காணப்பட்ட, வீடுகள் சேதமடைந்த பயனாளிகளுக்கு, மீட்பு மற்றும் புனரமைப்பிற்காக, மாநில பேரிடர் மீட்பு நிதி விதிமுறைகளின்படி, நிவாரண உதவி வழங்குவதற்காக, கடந்த 13ம் தேதி வெளியிட்ட ஆணைப்படி, புதுச்சேரி மாவட்ட பேரிடர் மீட்பு நிதியிலிருந்து ரூ. 33,78,500 தொடர்புடைய சப் கலெக்டர்களிடம் விடுவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, புதுச்சேரி மாவட்டத்தில் சேதம் அடைந்த குடிசை வீடுகளுக்கு தலா ரூ. 8,000 வழங்கப்படுகிறது. அதன்படி, புதுச்சேரியில் 15, உழவர்கரை 51, வில்லியனுாரில் 86, பாகூரில் 124 என மொத்தம் 276 வீடுகளுக்கும், பகுதி சேதமடைந்த கட்டட வீடுகளுக்கு தலா ரூ. 6,500, புதுச்சேரியில் 1 வீடு, உழவர்கரையில் 1, வில்லியனுார் 5, பாகூர் 2 என மொத்தம் 9 வீடுகளுக்கு வழங்கப்படுகிறது. பகுதி சேதமடைந்த ஓட்டு வீட்டிற்கு தலா ரூ. 4,000 வீதம், புதுச்சேரியில் 17, உழவர்கரையில் 29, வில்லியனுாரில் 115, பாகூரில் 117 என மொத்தம் 278 வீடுகளுக்கு வழங்கப்படுகிறது. ஒட்டுமொத்தாக புதுச்சேரி பகுதியில் ரூ. 1.94 லட்சம், உழவர்கரையில் ரூ. 5.30, வில்லியனுாருக்கு ரூ 11.80 லட்சம், பாகூர் பகுதியில் ரூ. 14.73 லட்சம் என, மொத்தமாக ரூ. 33.78 லட்சம் நிவாரணம் வரும் 21ம் தேதிக்குள் பயனாளிகள் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என, கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை