உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மூலக்குளம் - மேட்டுப்பாளையம் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

மூலக்குளம் - மேட்டுப்பாளையம் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

புதுச்சேரி : புதுச்சேரியில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றினாலும், மீண்டும் அதே இடத்தை சிலர் ஆக்கிரமித்து கடை அமைத்து வருகின்றனர்.புதுச்சேரியில் புற்றீசல் போல் பெருகி வரும் ஆக்கிரமிப்புகளை, 6 மாதத்திற்கு ஒரு முறை அகற்ற மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.அதன்படி கடந்த 4ம் தேதி முதல் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி துவங்கியது. முதல் கட்டமாக எஸ்.வி.பட்டேல் சாலை, லாஸ்பேட்டை ஏர்போர்ட் சாலை ஆக்கிரமிப்புகள் அற்றப்பட்டது.அதனை தொடர்ந்து, மூலக்குளம் மேட்டுப்பாளையத்தை இணைக்கும்சாலையில், ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நேற்று நடந்தது. உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் முன்னிலையில், பொதுப்பணித்துறை, போலீசார் இணைந்து, சாலையை ஆக்கிரமித்து கட்டியிருந்த கடையின் படிக்கட்டுகள், பிளக்ஸ் போர்டுகள் ஜே.சி.பி., மூலம் அகற்றினர். சாலையை ஆக்கிரமித்து வைத்திருந்த பொருட்களையும் பறிமுதல் செய்து கொண்டுசென்றனர்.

மீண்டும் துளிர்க்கும் ஆக்கிரமிப்புகள்...

புதுச்சேரியில், எந்தெந்த இடங்களில் ஆக்கிரமிப்பு அகற்றம் நடக்கவுள்ளது என, தேதி வாரியாக மாவட்ட நிர்வாகம் முன் கூட்டியே அறிவித்து விட்டது. இதனையறிந்த ஆக்கிரமிப்பாளர்கள் சிலர், அதிகாரிகள் வரும் நாளுக்கு முந்தைய நாள் தங்களுடைய பொருட்களை, தற்காலிகமாக காலி செய்துகொண்டு செல்கின்றனர். ஆக்கிரமிப்பு அகற்றி சென்ற மறு நாள், அதே இடத்தில் பொருட்களை இறக்கி வைத்து, வழக்கம்போல் வியாபாரம் செய்கின்றனர். இதனால், மீண்டும் ஆக்கிரமிப்புகள் தொடர்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ