உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரசு இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளுக்கு வாடகை நிர்ணயம்; முதல்வர் ரங்கசாமி தகவல்

அரசு இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளுக்கு வாடகை நிர்ணயம்; முதல்வர் ரங்கசாமி தகவல்

புதுச்சேரி : சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது நடந்த விவாதம்;சம்பத்(தி.மு.க): முதலியார்பேட்டை வானொலி திடல் தனியார் ஆக்கிரமிப்பில் உள்ளதால் பொது நிகழ்ச்சி, கருத்தரங்கம் நடத்த முடியவில்லை. ஆக்கிரமிப்பை அகற்ற அரசு முன்வர வேண்டும். ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நில அபகரிப்பு சட்டம் மூலம் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.முதல்வர் ரங்கசாமி: அரசு பதிவேட்டில் சம்பந்தப்பட்ட வானொலி திடல் நிலத்தின் பட்டா தனி நபர் பெயரில் உள்ளது. அது அரசு நிலம் அல்ல.சம்பத்: இந்த நிலத்தை ஆக்கிரமிப்பு வைத்துள்ளவர்கள் யார் என உங்களுக்கு தெரியும்.முதல்வர் ரங்கசாமி: வானொலி திடலில் கடந்த காலங்களில் பெரிய தலைவர்கள் வந்து பேசியுள்ளனர். தேர்தல் பிரசாரமும் நடந்துள்ளது. வானொலி திடல் முழுதும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. தற்போது சிறிய பகுதி தான் உள்ளது. எம்.எல்.ஏ., ஒத்துழைப்பு தந்தால் அந்த இடத்தினை அரசு ஆர்ஜிதம் செய்யும்.சம்பத்(தி.மு.க): வானொலி திடல் என்பது நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் அரசால் ஆர்ஜிதம் செய்யப்பட்ட இடம். ஆனால் அந்த இடத்தினை அதற்கு முன்னதாக விற்றுவிட்டதாக பத்திரம் தயார் செய்யப்பட்டுள்ளது. எனவே அரசு அதற்கு ஈடானா சொத்தை கையகப்படுத்த சட்டத்தில் வழி வகை உள்ளது. வானொலி திடலை மீட்க வேண்டும்.நேரு(சுயேச்சை): மறைமலை அடிகள் சாலை நியூடோன் தியேட்டர் முதல் அண்ணா சாலை வழியாக போத்தீஸ் வரை உள்ள இடம் அரசு புறம்போக்கு இடம். இந்த இடங்களை பலரும் கட்டடம் கட்டி ஆக்கிரமித்துள்ளனர். இங்கு பல மாடி கட்டடம் கட்டுகின்றனர். வியாபாரமும் நடக்கிறது. இதற்கு நகர அமைப்பு குழுமம் எப்படி அனுமதி அளித்துள்ளது என்று தெரியவில்லை.நான் பல முறை சொல்லியாகிவிட்டது. நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்.கண் டாக்டர் தோட்ட பகுதியில் ஒரு பள்ளிக்கு செல்லும் வழியை மறித்து கட்டடம் கட்டியுள்ளனர். இதுகுறித்து பல முறை புகார் கூறியும் நடவடிக்கை இல்லை.முதல்வர் ரங்கசாமி: நீங்கள் சொல்லும் அரசு புறம்போக்கு இடம் தற்போது ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது இல்லை. வழி வகையாகஆக்கிரமித்துள்ளனர்.100 ஆண்டுகள் கூட இருக்கும். இப்போது கடைகள், வர்த்தக நிறுவனங்களாக மாறியுள்ளன.சிவசங்கர் (சுயேச்சை); அந்த பகுதியில் ஜி.எஸ்.டி., வரி செலுத்துகின்றனர். ஆனால் தற்போது டிரேடு லைசென்ஸ் கொடுக்காமல் நிறுத்தி வைத்துள்ளனர்.முதல்வர் ரங்கசாமி: அரசு புறம்போக்கு இடத்தில் உள்ள கடை கட்டடங்களை இடிக்க வேண்டும் என்பது சரியாக இருக்காது. அதற்கு பதிலாக வாடகை நிர்ணயித்தால் நகராட்சிக்கு வருவாய் கிடைக்கும்.அதன் காரணமாகவே டிரேடு லைசென்ஸ் கொடுக்கப்படவில்லை. அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள கடைகளுக்கு வாடகை நிர்ணயிக்கப்படும். இதற்கான நடவடிக்கைளை அரசு எடுத்து வருகிறது.இவ்வாறு விவாதம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை