பாண்டி ஓஷன் பார்க்கில் குடியரசு தின விழா
புதுச்சேரி: இடையார்பாளையம் பாண்டி ஓஷன் பார்க்கில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. தவளக்குப்பம் அடுத்த இடையார்பாளையத்தில் அமைந்துள்ள பாண்டி ஓஷன் பார்க்கில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி, மேலான் இயக்குனர் அன்பு தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து ஊழியர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. விழாவில், மனித வள மேம்பாடு அதிகாரி ரோக் மரியான், நிர்வாக மேலாளர் குருபாலன் மற்றும் ஊழியர்கள் பல கலந்து கொண்டனர்.