உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை

 கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை

புதுச்சேரி: பண்டிகை காலங்களில் கூடுதலாக அரசு பஸ்கள் இயக்க வேண்டும் என, புதுச்சேரி போக்குவரத்து ஆணையருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. வட தமிழ்நாடு அகில பாரதிய கிராஹக் பஞ்சாயத்து நுகர்வோர் விழிப்புணர்வு இயக்கத்தின் இணை செயலாளர் ரமேஷ், அனுப்பியுள்ள கோரிக்கை மனு; இந்தியாவிலேயே முதன்மை சுற்றுலாத்தலமாக புதுச்சேரி உள்ளது. இங்கு, வெளி மாநிலங்களில் இருந்து படிப்பு மற்றும் தொழில் தொடர்பாக மக்கள் வருகின்றனர். தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகை காலத்தில், பொதுமக்கள் ஆம்னி பஸ்களை அதிகமாக பயன்படுத்துகின்றனர். அதை, சாதகமாக பயன்படுத்தி, பஸ் உரிமையாளர்கள் வழக்கத்திற்கு மாறாக டிக்கெட் விலையை உயர்த்தி வருகின்றனர். போக்குவரத்து துறை கண்காணித்து, ஆம்னி பஸ் டிக்கெட் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். பண்டிகை காலங்களில் கூடுதலாக அரசு பஸ்களை இயக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி