உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஒப்பந்த பேராசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு செய்ய கோரிக்கை

ஒப்பந்த பேராசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு செய்ய கோரிக்கை

புதுச்சேரி: ஒப்பந்த பேராசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் என இ.கம்யூ., மாநில செயலாளர் சலீம் வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: புதுச்சேரி அரசு மற்றும் சொசைட்டி கல்லுாரிகளில் பணியாற்றும் 151 ஒப்பந்த உதவிப் பேராசிரியர்களுக்கு இந்த ஆண்டு பணி நீட்டிப்பு வழங்கப்படாததால், ஜூலை 1 முதல் வகுப்புகள் நடைபெறாமல் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளது. நிரந்தரப் பேராசிரியர்களுக்கு இணையாகப் பணியாற்றும் இவர்களுக்கு ரூ.40,000 மட்டுமே ஊதியம் வழங்கப்படுவது அநீதியாகும். அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கப்படாத நிர்வாக முடக்கத்தால் இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணப்படாமல் உள்ளது. எனவே முதல்வர் உடனடியாகத் தலையிட்டு, ஒப்பந்த உதவிப் பேராசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்க வேண்டும். அத்துடன், அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க உடனடியாக நிரந்தரப் பணி ஆணை வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை