உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / விளையாட்டு மைதானம் அமைத்துதர கோரிக்கை

விளையாட்டு மைதானம் அமைத்துதர கோரிக்கை

திருக்கனுார்: கைக்கிலப்பட்டில் இளைஞர்கள், மாணவர்கள் விளையாட்டு திறனை மேம்படுத்தி கொள்ள அரசு மினி விளையாட்டு மைதானம் அமைத்து தர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மண்ணாடிப்பட்டு தொகுதி கைக்கிலப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் தங்களது விளையாட்டுத் திறனை மேம்படுத்திக் கொள்ள அப்பகுதியில் அரசு மூலம் விளையாட்டு மைதானம் ஏதுவும் ஏற்படுத்தி தரவில்லை.இதனால், அப்பகுதி இளைஞர்கள் வேறுவழியின்றி தனியார் மனைப்பிரிவில் தற்காலிகமாக சிறிய வாலிபால் மைதானம் அமைத்து பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் புயல் காரணமாக தற்போது பெய்து வரும் கனமழையால், தற்காலிகமாக இளைஞர்கள் வாலிபால் விளையாடி வரும் மைதானம் முழுதும் மழைநீர் தேங்கி, பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறியுள்ளது. இதனால், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் விளையாட்டு பயிற்சியை மேற்கொள்ள முடியவில்லை.எனவே, அப்பகுதி இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் விளையாட்டு திறனை மேம்படுத்தி கொள்ளும் வகையில் அரசு மூலம் சிறிய அளவிலான விளையாட்டு மைதானம் அமைத்து தர வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !