மகளிர் ஆணையத்திற்கு நிர்வாகி நியமிக்க கோரிக்கை
புதுச்சேரி: மகளிர் ஆணையத்திற்கு உடனடியாக நிர்வாகிகளை நியமிக்க வேண்டும் என மக்கள் முன்னேற்ற கழக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.அவரது அறிக்கை:புதுச்சேரி மகளிர் ஆணைய தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகளை நிரப்பாத புதுச்சேரி அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளதோடு ரூ. 25,000 அபராதம் விதித்துள்ளது. இது துரதிருஷ்ட வசமானது.புதுச்சேரி அரசின் நிர்வாகத்திறமையின்மைக்கு இது உதாரணம். இந்த வழக்கில் சட்டத்தால் உருவாக்கப்பட்ட ஒரு நிறுவனம் சட்டத்தால் மட்டுமே செயல்பட வேண்டும்.தனது விருப்பு வெறுப்புக்குத் தகுந்தவாறு அவற்றை வளைத்து நடத்த முடியாது என்பதை நீதிமன்றத் தீர்ப்பு சுட்டிக்காட்டி உள்ளது.புதுச்சேரி அரசு இந்த ஆணையத்திற்கான தலைவரையும் உறுப்பினர்களையும் உடனடியாக நியமிக்க வேண்டும். அடுத்த 15 நாட்களுக்குள் இதை செய்யத் தவறினால் எங்கள் கட்சி சார்பில், இது சம்பந்தமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.