உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கொரோனா காலத்தில் பணியாற்றியவர்களுக்கு முன்னுரிமை வழங்க கோரிக்கை

கொரோனா காலத்தில் பணியாற்றியவர்களுக்கு முன்னுரிமை வழங்க கோரிக்கை

புதுச்சேரி: காலி பணியிடங்களை நிரப்பும்போது, கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என புதுச்சேரி மாநில மாணவர்கள் மற்றும் பெற்றோர் நல சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து நலச்சங்க தலைவர் பாலசுப்ரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கை:சுகாதாரத் துறையில் 155 செவிலியர் பணியிடங்கள் நிரப்பப்படுவது உறுதியாகியுள்ளது. இதற்கிடையே, இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் 170 செவிலியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது.இந்த பணியிடங்களை நிரப்ப அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிய வருகிறது. இந்த பணியிடங்களை, கொரோனா காலத்தில் தங்கள் உயிரை துச்சமென கருதி அரசு மருத்துவமனைகளில் பணியாற்றிய செவிலியர்களுக்கு முன்னுரிமை அளித்து பணியமர்த்த வேண்டும்.இவ்வாறு கூறப் பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ