இ - கே.ஓய்.சி., பதிவிற்கு முகாம் நடத்த கோரிக்கை
புதுச்சேரி: இ- கே.ஓய்.சி. பதிவு செய்வதற்கு அரசு மூலம் முகாம்கள் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென வழக்கறிஞர் சசிபாலன் வலியுறுத்தியுள்ளார். அவரது அறிக்கை: புதுச்சேரி குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை, அனைத்து ரேஷன் கார்டு பயனாளிகளும் இ - கே.ஓய்.சி., பதிவு செய்வது கட்டாயம் என தெரிவித்துள்ளது. இந்த தகவலை அரசு விளம்பரங்கள், பதாகைகள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் பொதுமக்களுக்கு தெரிவித்து வருகிறது. இதனால், பொது சேவை மையங்களில் மக்கள் அதிக எண்ணிக்கையில் காத்திருக்கும் நிலை உருவாகியுள்ளது. மேலும், நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளதால், முதியோர், பெண்கள் மற்றும் வேலைக்குச் செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.எனவே, அரசு பொதுமக்கள் சிரமத்தினை கருத்தில் கொண்டு, வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிறு நாட்களில், அந்தந்த பகுதிகளில் இடைக்கால முகாம்களை ஏற்பாடு செய்து இ- கே.ஓய்.சி. பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.