மருத்துவ உதவி தொகை மீண்டும் வழங்க கோரிக்கை
புதுச்சேரி: ஓய்வூதியர்களுக்கு நிறுத்தப்பட்ட மருத்துவ உதவித் தொகையைமீண்டும் வழங்கிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து மிகவும் பிற்படுத்தப்பட்ட ஓய்வு பெற்ற அரசு ஊழியர் நலச்சங்க மாநில கவுரவ தலைவர் விஸ்வநாதன்அறிக்கை:புதுச்சேரி மாநிலத்தில் உயர்த்தப்பட்ட மருத்துவ உதவித்தொகை ஓய்வூதியதாரர்களுக்குமிகவும் உதவியாக இருந்தது. மருத்துவ உதவித்தொகை தற்போதுநிறுத்தம் செய்வதாக வெளியாகியுள்ள தகவல் ஓய்வூதியதாரர்கள் மத்தியில் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் ரத்த அழுத்தம், இருதய நோய், கல்லீரல் பாதிப்பு, சிறுநீரக கோளாறு போன்றவற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.எனவே, ஓய்வூதியர்களின் வாழ்வதாரத்திற்கு உறுதுணையாக நிறுத்தப்பட்ட மருத்துவ உதவி தொகையினை மீண்டும் வழங்கிட ஆவண செய்ய வேண்டும்.இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.