| ADDED : செப் 23, 2026 08:43 PM
நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் கம்பன் அரசு மேல்நிலைப் பள்ளியில் 1,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளியில் இயற்கையான சூழலில் 5 ஏக்கர் பரப்பளவில் விளையாட்டு மைதானம் அமைந்துள்ளது. இங்கு மாணவ, மாணவிகள் மட்டுமின்றி, சுற்றியுள்ள பல கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் காலை, மாலையில் விளையாட்டு மற்றும் நடை பயிற்சி பெற்று வருகின்றனர். இந்த மைதானம் 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மையப்பகுதியாக இருக்கிறது. கிராமப்புற பள்ளி, கல்லுாரி மாணவ–மாணவிகள், இளைஞர்கள் பயன்பெறும் வகையில் பள்ளி விளையாட்டு மைதானத்தில் ஹைமாஸ் விளக்கும், மினி ஸ்டேடியமும் அமைக்க அரசு நடடிக்கை எடுக்க வேண்டும்.