உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கடல் அலையில்  சிக்கிய வாலிபர் மீட்பு

கடல் அலையில்  சிக்கிய வாலிபர் மீட்பு

புதுச்சேரி: விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலாஜி, 25; சற்று மனநிலை பாதித்தவர். இவர் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பரிசோதனைக்காக பாலாஜியை அவரது தாய் நேற்று அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து வந்தார். அங்கு பாலாஜியை மருத்துவமனையின் ஒரமாக நிற்க வைத்துவிட்டு, சீட்டு போட சென்றார். அதற்குள் அங்கிருந்து கடற்கரைக்கு சென்ற பாலாஜி கடலில் இறங்கினார். அவரை கடல் அலை இழுத்து சென்றது. இதனைப் பார்த்த பெரியக்கடை பெண் உதவி சப் இன்ஸ்பெக்டர் பூரணி, செந்தில் ஆகியோர் பாலாஜியை மீட்டனர். அவரை, அவரது தாயிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை