உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பிரிவினைவாதத்தை எதிர்ப்போம்: ஜனநாயகத்தை காப்போம் ஊர்வலம்

பிரிவினைவாதத்தை எதிர்ப்போம்: ஜனநாயகத்தை காப்போம் ஊர்வலம்

புதுச்சேரி: புதுச்சேரி, அகில பாரதீய வித்யார்த்தி பிரிஷத் மாணவர் அமைப்பு(ஏ.பி.வி.பி) சார்பில் 'பிரிவினைவாதத்தை எதிர்ப்போம், ஜனநாயகத்தை காப்போம்' ஊர்வலம் நடந்தது. சாரம், அவ்வை திடலில் துவங்கிய ஊர்வலத்தை தென்மண்டல அமைப்பு செயலாளர் குமரேஷ் துவக்கி வைத்தார். வட தமிழக மாநில செயலாளர் பன்னீர்செல்வம் பங்கேறு பேசுகையில், 'எஸ்.ஐ.ஆர்., பற்றி தவறான பரப்புரையின் மூலம் மக்களின் மனங்களை வெல்ல முடியாதவர்கள், தெருக்களில் போராட்டம் நடத்தி ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர். ஜனநாயக நாட்டில் கருத்து வேறுபாடு இருக்கலாம், தனி நபரின் ஓட்டுரிமை நீக்கப்பட்டு இருந்தால் ஆதாரத்துடன் கோர்ட் அணுகலாம். ஆனால், அதனை விட்டுவிட்டு அரசியலமைப்பு நிறுவனங்களின் மீது தாக்குதல் நடத்துவதும், போலியான புரட்சி மூலம் அழுத்தம் கொடுப்பதும், பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையை சிதைப்பதாகும்' என்றார். இதில், தேசிய செயற்குழு உறுப்பினர் தீபன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீராம் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேசிய கொடியுடன் பங்கேற்றனர். சாரம், அவ்வை திடலில் துவங்கிய ஊர்வலம், காமராஜ் சாலை, அண்ணா சாலை வழியாக சென்று அஜந்தா சிக்னலில் முடிவடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை