உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரிடம் ரூ.30 லட்சம் மோசடி : 3 பேருக்கு வலை

 ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரிடம் ரூ.30 லட்சம் மோசடி : 3 பேருக்கு வலை

அரியாங்குப்பம்: ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரிடம் 30.5 லட்சம் ரூபாய், மோசடி செய்த 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். அரியாங்குப்பம், வீராம்பட்டினம் ரோட்டை சேர்ந்தவர் கருணாமூர்த்தி, 74; ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். இவருக்கு, அரும்பார்த்தபுரத்தை சேர்ந்த கணேசன் மூலம், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் காஞ்சிபுரத்தை சேர்ந்த சக்திவேல் (எ) ஸ்ரீதர்,41, என்பவர் அறிமுகமானார். அப்போது, ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்தால், இரடிப்பு லாபம் தருவதாக, கருணாமூர்த்தியிடம், சக்திவேல் மற்றும் இவரிடம் புரோக்கராக இருக்கும் விழுப்புரம் கோலியனுார் கவுசல்யா, அவரது மகன் கவியரசன் ஆகியோர் ஆசை வார்த்தை கூறினர். அதை நம்பிய கருணாமூர்த்தி, கடந்த 2020ம் ஆண்டு, சக்திவேல், வாங்கி கணக்கில், 3 தவணைகளாக மொத்தம் 30.5 லட்சம் ரூபாயை, அனுப்பி, முதலீடு செய்தார். அதன் பிறகு, அவருக்கு லாபம் கொடுக்காமல், பல்வேறு காரணங்களை கூறி, சக்திவேல் ஏமாற்றி வந்தார். இதுகுறித்து, கருணாமூர்த்தி, நேற்று முன்தினம் கொடுத்த புகாரின் பேரில், சக்திவேல் மற்றும் இவருக்கு உடந்தையாக இருந்த கவுசல்யா, கவியரசன் ஆகிய 3 பேர் மீது, அரியாங்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் மோசடி வழக்குப் பதிந்து தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !